செவ்வாய், 15 ஜூலை, 2014

பொன்னியின் செல்வன் ( பகுதி 4 )


                                   பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் குறித்த எனது இறுதி பதிவு.

         வானதி:

                                    குந்தவையின் உயிருக்கு உயிரான தோழி, அருள்மொழியை பைத்தியமாக காதலித்தாள். காற்றுக்கு வலித்து விடுமோ என்று மௌனத்தை மட்டுமே அதிகம் பேசுபவள். தாயில்லாத பெண், தன்னை தாய் போல் பார்த்துகொண்ட குந்தவையை உயிரினும் மேலாக மதித்தாள். பிறந்ததில் இருந்து ஏமாற்றத்தை மட்டுமே அதிகம் சந்தித்தவள், அதனால் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்தாள்


வானதி
                                                ஆனால் பூனையின் உருவில் அவளை காதல் தீ அணைத்து கொண்டது, அதில் சிக்கி கொண்டு தினம் தினம் எரிந்து கொண்டிருந்தாள். இலங்கைக்கு செல்லும் முன் அருள்மொழி அவளை பார்க்க வந்தது முதல் அவனுக்காகவே வாழ தொடங்கினாள்.

                                            ஆனால் அவன் வேறு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்ததும் தன் உயிரையே மாய்க்க துணிந்தாள், தன் காதலுக்காக யாரும் யோசித்து பார்க்க கூட தயங்கும் விதம் தன் உயிர் உள்ளவரை அரியணையில் ஏற மாட்டேன் என்று சபதம் செய்தது மட்டுமில்லாமல் அதை செயலிலும் காட்டி தன் மனதுக்கு பிடிதவனையே மணாளனாக அடைந்தாள்.

    அருள்மொழிவர்மர்:

                                                 பொன்னியின் செல்வனாக நம்மை எல்லாம் தன்னுடனே கட்டி போட்டவர். அவர் ஒரு சிறந்த தம்பி, சிறந்த நண்பன், சிறந்த மகன், சிறந்த காதலன். சிறந்த தலைவன். மொத்தத்தில் "சிறந்த" என்ற வார்த்தையே இவருக்காக படைக்க பட்டதாகவே உணர்கிறேன்.
அருள்மொழிவர்மன்

                                           அவரிடம் மாபெரும் வீரம் இருந்தது, அதை மிஞ்சிவிடும் அளவு அன்பு இருந்தது. அவருக்கு அனைவரிடத்திலும் பெரும் மரியாதை இருந்தது. தன் சித்தப்பா உத்தம சோழனுக்கு தானே முடி சூட்டி வைக்கும் நேரம்,அதை படிக்கும் அனைவர் மனதிலும் அத்தகைய தியாக அலை தாக்கி இருக்கும் என்பதே உண்மை.

                                        ஐந்தாம் பாகத்திற்கு தியாகச் சிகரம் எவ்வளவு பொருத்தமான தலைப்பு. பொன்னியின் செல்வனை முடித்த பின்பு எனக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய அந்த மாமனிதன் மீது இருந்த மரியாதை வானளவு உயர்ந்துள்ளது என்பது தான் உண்மை.

    கல்கி:
                     
கல்கி

               படைப்பவன் கடவுள் என்றால்,பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்களை படைத்து  என்னுள்  உயிருடன்  உலவ விட்ட கல்கியும் கடவுள் தான்.  
             
                                                                                                             -முற்றும்


  நண்பர்களே ஓட்டு போடவும் உங்கள் கருத்துக்களை பகிரவும் மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக