ஞாயிறு, 20 ஜூலை, 2014

ஃபேஸ்புக் தீம் மாற்றம் செய்வது எப்படி?

               உங்களில் பலருக்கு அதே " ஊதா கலரு ரிப்பன் " ஃபேஸ்புக் தீம் பார்த்து பார்த்து அலுத்து விட்டதா?  அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.


                ஒரு அழகான பொண்ணு ரோட்டுல போன தானா நம்ம கண்ணும் அந்த பொண்ண பாக்கும்,  ஆனா அவ  பின்னாடியே ஒரு பேரழகான பொண்ணு வந்தா அழகான பொண்ண விட்டுட்டு பேரழகான பொண்ண பாக்குறதில்லையா.. அந்த மாதிரி எனக்கு புதுசா ஃபேஸ்புக் தீம் கண்ணுல பட்டுச்சு அதனால் பழைய தீம விட்டுட்டு புது தீம பயன்படுத்துனேன் அது ரொம்ப புடிச்சு போகவே அத உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு ஓடோடி வந்தேன்..

             சரி மொக்க போடாம விசயத்துக்கு வாடான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்டதால நேரா விஷயத்துக்கு வரேன்.

       இத Mozilla Firefox ல பயன்படுத்துங்க.

              1.முதலில் இங்கே கிளிக் செய்து Mozilla Firefox Add-on ஐ டவுன்லோட் செய்து அதை இன்ஸ்டால் செய்து விடுங்கள்.



               2. Add-on இன்ஸ்டால் ஆனதும் வலது மூலையில் " S " என்று வந்து விடும். அடுத்து ஃபேஸ்புக் முகப்பு பகுதியை திறந்து கொள்ளுங்கள்.


          
               3. அடுத்ததாக கீழே உள்ள படத்தில் காட்டியவாரு அந்த " S " ஐ கிளிக் செய்து  " Find styles for this site " என்பதை செலக்ட் செய்யுங்கள்.



           4. அதை கிளிக் செய்தவுடன் கீழே காட்டப்பட்டுள்ளது போல ஒப்பன் ஆகும். அதில் உங்களுக்கு வேண்டிய ஃபேஸ்புக் தீம் ஐ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.



     
             5. தேர்ந்தெடுத்த தீம் ஐ கிளிக் செய்தால் உருவாகும் பகுதியில் " Install with stylish " என்பதை கிளிக் செய்யவும்.



     
             6. அவ்வளவு தான் உங்களுக்கு பிடித்தது போல புதிய ஃபேஸ்புக் தீம் கீழே காட்டப்பட்டுள்ளது போல கிடைத்து விடும்.




                                       நண்பர்களே ஓட்டுப் போடவும், கருத்துக்களை பகிரவும் மறவாதீர்கள், நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக