பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் குறித்த எனது இரண்டாவது பதிவு.
நந்தினி:
பொன்னியின் செல்வனை முடித்த பிறகு இந்த பெயரை நினைக்கும் போது மனதில் ஏதோ இனம் புரியாத சோகம்..அதே சோகமானது அவளுக்கு அதிக வலியை தந்தது..
![]() |
| நந்தினி மற்றும் பெரிய பழுவேட்டையர் |
அது அவளை வாழவும் விடவில்லை.. சாகவும் விடவில்லை.. தன் மனதை கல்லாக்கி கொண்டு தான் அவள் அனைத்தையும் செய்தாள். அவளை அனைவரும் கொடிய நாகம் என்று திட்டினாலும் எனக்கு அவள் பெயரில் முழு மரியாதை இருந்தது. தான் சோழ தேசம் வந்ததன் முக்கிய நோக்கம் வேறு எனினும் அவள் பெரிய பழுவேட்டையரின் காதலுக்கு உண்மையாகவே இருந்தாள். கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை பார்த்த பிறகு அவள் மனது அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளில் விளக்கி விட முடியாது. இறுதியாக நந்தினியின் மறைவு அத்தியாயம் படிக்கும் போது ஒரு பெண்ணாக பிறந்து தான் அனுபவித்த அனைத்து சோகங்களையும் என் மனதில் விதைத்து விட்டு அவள் மறைந்து விட்டாள்.
ஆதித்த கரிகாலன்:
![]() |
| ஆதித்த கரிகாலன் |
மாபெரும் வீரன். தனது சிறுவயதிலேயே பல போர்களங்களை சந்தித்தவன். இயல்பாகவே அவன் அடிக்கடி கோபம் கொள்பவனாகவும், பொறுமை அற்றவனாகவும் கல்கி சித்தரித்து இருக்கிறார். அவன் போர்களங்களில் அடைந்த காயங்கள் காலப்போக்கில் ஆறிவிட்டன. ஆனால் அவன் தன் காதலால் அடைந்த காயம் அவன் இதயத்தில் அழியாமல் வருத்தி கொண்டே இருந்தது.
அவன் கடம்பூர் மாளிகையில் மர்மமான முறையில் கொல்லப்படும் முன்பு, மனதளவில் அவன் இறந்து தான் இருந்தான்.அத்தகைய வீரன் கொல்லப்பட்டது உண்மையிலேயே சோழ நாட்டிற்கு மிகபெரும் இழப்பு.
மணிமேகலை:
![]() |
| மணிமேகலை |
கடம்பூர் இளவரசி,கருநிறத்து அழகினு கல்கி வர்ணிக்கிறார். படிப்பறிவு இல்லாத பெண்ணாகவும், வந்தியத்தேவன் மேல் கொண்ட ஒரு தலை காதலாலும் நம் மனதில் நிறைகிறாள். இந்த நாவலில் பலபேருடைய காதல் சொல்லப்பட்டாலும் என் மனதில் பதிந்தது என்பதை விட பாதித்தது என்றால் அது மணிமேகலையின் காதல் தான். அவள் யாழ் வாசித்து பாடும் பாடலை இறுதியிலும் அவளை பாட வைத்து நம் மனதை எல்லாம் கலங்கடித்து விட்டார் கல்கி.
இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி சகியே நினைவுதானோடி!
இதில் "கனவுதானோடி" என்றும் சொல்லும் போதே என் இதயத்தில் ஒரு வித பாரம் உண்டாகிறது. மணிமேகலை இதை பாடிகொண்டே தன் உயிரை விடுகிறாள். நான் மட்டுமல்ல பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்குமே மணிமேகலை குறித்த நினைவு படித்து முடித்த ஒரு வாரதிற்கேனும் வருத்தத்தை அளித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-தொடரும்



Ponniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது ?
பதிலளிநீக்குhttps://asmalltownkid.wordpress.com/2017/08/10/ponniyin-selvan-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE-5/