திங்கள், 15 ஜூன், 2015

வீடு

                  நான் அஞ்சாவது படிச்சுட்டு இருக்கும் போது எங்க அப்பா எங்களுக்குனு ஒரு சொந்த வீடு கட்ட ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி வர நாங்க எல்லாரும் கூட்டு குடும்பமா தான் இருந்தோம். சொந்தத்துக்குள்ள அடிக்கடி சண்ட வர ஆரம்பிச்சதும் இப்டியே விட்டா சொந்தமே இல்லாம போயிரும். அதுக்கு பதிலா நாம தனியா வீடு கட்டி குடி போயட்டோம்னா மிஞ்சி இருக்க கொஞ்ச பாசமாவது இருக்கும்னு என் அம்மா அக்கா என்ன தங்கச்சிய கூட்டிகிட்டு ஏதோ ஒரு நம்பிக்கைல கிளம்பி வந்துட்டாங்க.
                    இதுவரை கூட்டு குடும்பம்னே இருந்துட்டதால தனக்குன்னு எந்த ஒரு சொத்துமே சேர்த்து வைக்காத எங்க அப்பா அந்த வீட்ட கட்டி முடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு கூட இருந்து பார்த்தவன் நான். அந்த வீடு கட்ட ஆரம்பிச்சதுல இருந்து ஒரு ராத்திரியும் அவர் நிம்மதியா தூங்கி நான் பார்த்தது இல்ல. வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் அந்த இடத்துலேயே ஒரு சின்ன குடிசையா ஒன்னு கட்டிக்கிட்டு அதுக்குள்ள தான் நாங்க அஞ்சு பேரும் இருந்தோம். மலை பெய்ர நேரம் எல்லாம் எங்களுக்கு நரகமா தான் கழியும். கொத்தனாருக்கு சம்பளம் கொடுக்க முடியாம அஞ்சு நாள் வேலை நடந்தா அடுத்த பத்து நாளைக்கு வேலை நடக்காது. அந்த வேலை ஒழுங்கா நடந்தா குடும்பத்துல ஏதாவது பிரச்சனன்னு, இப்படி கொஞ்சகொஞ்சமா கட்டி அந்த வீட்ட முழுசா கட்டி முடிக்க மூணு வருஷம் ஆச்சு. வீட்டுக்கு பெயின்ட் வைக்க இன்னும் மூணு வருஷம் ஆனுச்சு. ஆனா இந்த கஷ்டத்த எல்லாம் தாண்டி அந்த வீட்ட கட்டி முடிச்சு மொத தடவையா பால் காய்ச்சி அந்த வீட்டுக்குள்ள குடியேறுனப்ப எங்க அப்பா அம்மா முகத்துல இருந்த சந்தோசம், நிறைவு விலைமதிக்க முடியாத ஒன்னு. 
  


                இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் தான் வீடு திரைப்படம் பாத்தேன். அந்த படத்த என்னால ஒரு பார்வையாளனா மட்டும் பாக்க முடியல. சுதா கதாபாத்திரம் நம்ம ஒவ்வொரு வீட்லயும் இருக்க ஒரு கதாபாத்திரம் தான். அது நம்ம அப்பவோ அம்மாவோ அக்காவோ அண்ணனோ ஏன் இத படிக்கிற நீங்களாவே கூட இருக்கலாம். அதனால ஒவ்வொரு பார்வையாளனும் இந்த படத்தோட ஒரு கதாபாத்திரமா ஒன்றி தான் இந்த படத்த பார்பாங்க. படம் பார்த்த நேரம் முழுவதும் என் குடும்பத்தில் நடந்த காட்சிகள் தான் கண்ணு முன்னாடி ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஒரு உதவி கிடைச்சா பத்து பிரச்சன வரும். வீட்டுக்கு தளம் போட்டதும் வந்து பாக்குற முருகேசன் தாத்தா காட்சிகள் உலக தரம் வாய்ந்தவை. அவர் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஆனால் படத்தின் முடிவு.......???? எத்தனை முயற்சி செய்தும் என்னால் அந்த படத்தின் முடிவை மாற்றி அமைக்க முடியாது. இரண்டு நாட்கள் அதே யோசனையோடு மட்டுமே இருந்தேன். பார்வையாளனான எனக்கே இப்படி என்றால் வேலையாட்கள் வேர்வை சிந்த இங்கு ரத்தம் சிந்தி உழைத்த உண்மை சுதாக்களின் நிலைமை எப்படி இருக்கும். எண்ணி பார்க்க கூட முடிய வில்லை. இப்போதும் பயணத்தின் போது ரோட்டோரமாய் முழுமை அடையாமல் இருக்கும் கட்டிடங்களுக்கு பின்னால் என் அப்பா போன்றோரின் உழைப்பும் எத்தனை எத்தனை சுதாகளின் கண்ணீரும் ஒளிந்திருக்கும் என எண்ணி பார்த்து கொள்கிறேன். என் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக